--- --:--:-- --

புதையல் எடுப்பதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி.. ஓட்டம் பிடித்த ஜோதிடர்..!

6

சேலம் மாவட்டம் மேட்டூரில் புதையல் எடுப்பதாக கூறி மோசடி செய்த ஜோதிடரை பொறிவைத்து பிடிக்க முயன்ற பொழுது காரில் இருந்து தப்பி ஓடினார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலுரை சேர்ந்தவர்கள் முருகேசன் – புவனேஸ்வரி தம்பதியர்.

 

இவர்கள் மேட்டூர் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்த ஜோதிடர் மாதேஸ்வரன் என்பவரிடம் ஜோதிடம் பார்த்துள்ளனர். அப்பொழுது முருகேசன் வீட்டில் புதையல் எடுக்க பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி அவர்களிடம் 5 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் பெற்ற பின்னர் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

 

இதையடுத்து மாதேஸ்வரனை பிடிக்க திட்டமிட்ட முருகேசன் குடும்பத்தில் ஒருவருக்கு திருமண தடை உள்ளதாகவும் அதற்கு பரிகாரம் செய்யுமாறு ஜோதிடரை தொடர்பு கொண்ட நிலையில் அங்குள்ள ஜோதிடரை சுற்றி வளைத்தனர்.

 

ஜோதிடரின் கார் கதவு மோதியதில் ஒருவர் காயமடைந்தார். ஜோதிடர் தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon