--- --:--:-- --

வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த சடலம்.. உடலை எடுக்க விடாமல் நாய் நடத்திய பாச போராட்டம்..!

5

திருச்சியில் இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் பாச போராட்டம் நடத்திய நாயால் அந்த பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். மணிகோட்டை பகுதியை சேர்ந்தவர் மதியழகன்.

 

தனது தாயாரின் இறப்பிற்கு பின் மதுவுக்கு அடிமையான இவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக மதியழகன் நடமாட்டம் இல்லாததோடு அவரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் அளித்தனர்.

 

போலீசார் வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது மதியழகன் இறந்து அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முயன்ற நிலையில் அவர் வளர்த்து வந்த நாய் யாரையும் நெருங்க விடாமல் குரைத்துள்ளது.

 

பின்னர் நாய் பிடிக்கும் ஊழியர்களை வரவழைத்து நாயை பிடித்து சென்றனர். இதனையடுத்து உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon