நான்கு மாணவிகள் மயக்கம்… பள்ளியின் தாளாளர் மீது வழக்கு..!
மதுரையில் தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் அளவுக்கு அதிகமான மாணவிகளை ஏற்றியதால் மாணவிகள் மயக்கம் அடைந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பாலை அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு சொந்தமான பேருந்து ஒன்று மாலையில் பள்ளி முடிந்து மாணவிகளை ஏற்றி கிளம்பியது.
அப்போது அளவுக்கு அதிகமாக மாணவிகளை பேருந்தில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் 4 மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பானது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட முதன்மை கல்வி இயக்குனர் உறுதி அளித்திருந்தார்.
இதனால் பள்ளியில் தாளாளர் தலைமை ஆசிரியர் மற்றும் பேருந்து ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





