செயின் பறிப்பில் ஈடுபட்ட முன்னாள் காவலர் கைது..
சென்னை ஆவடி சுற்றுவட்டாரங்களில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக சிறப்பு காவல் படை முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டார். ஆவடியில் கடந்த 16 ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சாலையில் சென்று கொண்டிருந்த கற்பகம் என்பவரிடம் 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுபோல சுற்றுவட்டாரங்களில் பல இடங்களில் நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறப்பு காவல் படை முன்னாள் காவலர் சதீஷ் கைது செய்தனர்.
ஆவடி திருமுல்லைவாயலில் சதீஷ் பல்சர் பைக் மூலம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு போலீசாருக்கு தண்ணீர் காட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 51 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் சதீஷின் கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.







