திருமுருகன்பூண்டி நகராட்சியின் முதல் தலைவராக முன்னாள் நகரச் செயலாளர் திமுக நா.குமார் பதவி ஏற்றார்
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 9 மாத தி.மு.க ஆட்சியில் செய்த சாதனையை சொல்லி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 2-ஆம் தேதி வெற்றி பெற்றவர்கள் அனைவரும் வார்டு கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதனைதொடர்ந்து நேற்று 4 ஆம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தநிலையில் தமிழகத்தில் 1374 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களில் 952 இடங்களை திமுக தனியாக கைப்பற்றியுள்ளது.
அதேபோல் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 73, சிபிஎம் 24, சிபிஐ 13 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் 3843 நகராட்சி வார்டு உறுப்பினர்களில் 2360 நகராட்சி வார்டு உறுப்பினர்களை திமுக கைப்பற்றியுள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 151, சிபிஎம் 41, சிபிஐ 19 ஆகிய இடங்களில் வென்றனர்.
அதேபோல் 7621 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் திமுக 4388 இடங்களிலும், காங்கிரஸ் 368, சிபிஎம் 101, சிபிஐ 26 இடங்களிலும் வெற்றி பெற்று மகத்தான சாதனை புரிந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சென்னை சென்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதனையடுத்து திருமுருகன்பூண்டி நகராட்சி செயலாளரும், 25 வது வார்டு கவுன்சிலருமான பாரதி தலைமையில் முன்னாள் நகர செயலாளரும் 26 வது வார்டு கவுன்சிலருமான குமார் முன்னிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் வெற்றி பெற்ற 17 கவுன்சிலர்களும் சென்னை அறிவாலயத்தில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல. பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தி.மு.க மாநிலத் தலைமை திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் பதவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் தி.மு.கவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இதுகுறித்து கூட்டணிக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்தனர்.
அப்போது அவர்களும் தி.மு.கவினரின் கடுமையான உழைப்பை ஏற்று தி.மு.கவிற்கு ஆதரவுத் தருவதாக உறுதி அளித்தனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு தனதுக் கட்சியினரை தலைவர் பதவிக்கு போட்டியிடுமாறு அறிவுறுத்தியது. இதனால்கட்சி கட்டுபாட்டைமீறமுடியாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகர செயலாளரும் 10-ஆவது வார்டு கவுன்சிலருமான சுப்பிரமணியம் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் எனஅறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் ஒவ்வொரு கவுன்சிலராக திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்திற்கு வரத் தொடங்கினர். இவர்களை திருமுருகன்பூண்டி போலீசார் சோதனை செய்து அரங்கக் கூட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 10 மணியளவில் நகராட்சி தலைவர் தேர்தலுக்கான விருப்ப மனு வாங்கப்பட்டது.
இதில் திமுக சார்பில் முன்னாள் நகர செயலாளரும், 26 வது வார்டு கவுன்சிலருமான குமார் மனு .கொடுத்தார். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியம் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு கொடுத்தனர். இதில் அதிமுக விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து இருவரின் தலைவருக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு வாக்கு சீட்டு தயார் செய்யப்பட்டது.
இந்தத் தேர்தலை தேர்தல் நடத்தும் அலுவலரும், திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனருமான முகம்மது சம்சுதீன் முன்னிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தவமணி, ராமமூர்த்தி, செல்வராஜ், ஆனந்தன், செந்தில் ஆகியோர் நடத்தினர். பின்னர் 10.30 மணி அளவில் ஒவ்வொரு கவுன்சிலராக கையெழுத்திட்டு மறைவாக வைக்கப்பட்டிருந்த வாக்குபெட்டியில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
பின்னர் வாக்குப்பெட்டி சீல்வைக்கப்பட்டது. சிறிதுநேரத்திற்கு பின்னர் வாக்குப்பெட்டியின் சீல் உடைக்கப்ட்டு வாக்குகளை எண்ணத் தொடங்கினர். இதில் திமுகவைச் சேர்ந்த குமாருக்கு 15 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியத்துக்கு 12 வாக்குகளும் விழுந்தன. இதனையடுத்து திமுகவின் குமார் திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இந்தத் தேர்தலை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் மகன் முகம்மது சம்சுதீன் முன்னிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தவமணி தவமணி ராமமூர்த்தி செல்வராஜ் ஆனந்தன் செந்தில் ஆகியோர் நடத்தினர். இதனையடுத்து திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவராக தேர்வுசெய்யப்பட்ட குமாருக்கு பூண்டி கமிஷனர் முகம்மது சம்சுதீன் மற்றும் நகர செயலாளர் பாரதி உள்பட திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் மற்றும் முன்னாள் தலைவர் லதா உள்பட பொதுமக்கள் பலரும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் அலுவலகத்தை வெளியே வந்த திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமாருக்கு திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் அவரை அலேக்காக தூக்கி ரோடுகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். வழிநெடுக குறத்தி நடனம், மட்டதாலமடித்து நடனமாடி மகிழ்ந்தனர். பட்டாசுகள் வெடித்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி இனிப்புகள் வழங்கினர்.
இந்தநிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் தேர்தலில் எதிர்த்து போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் முன்னாள் கவுன்சிலர் பொன்னுசாமி மனைவியும், இந்திய கம்யூ. கட்சி 21 வது வார்டு கவுன்சிலருமான ராஜேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு அவருக்கும் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஓட்டைமாற்றி போட்ட கருப்பு ஆடு யார்?
திமுக கூட்டணி சார்பில் திமுகவிற்கு 9 கவுன்சிலர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கவுன்சிலர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 வாக்குகள் என 17 கவுன்சிலர்கள் இருந்தனர். அதிமுக சார்பில் 10 கவுன்சிலர்கள் இருந்தனர்.

கூட்டணி கட்சி கூட்டணி தர்மத்தின்படி திமுக 17 வாக்குகள் பெற்று வெற்றி அடையும் என்று நினைத்திருந்தனர், ஆனால் திமுக தலைமை திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒதுக்கியதால் திமுகவின் கனவு பலிக்கவில்லை என்று நினைத்த நிலையில் வாக்களித்த மக்களும் கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் ஒருமித்த கருத்தாக திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பது என முடிவு செய்திருந்தனர்.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதை ஏற்றுக் கொள்ளாமல் அந்த கட்சி சார்பாக சுப்பிரமணியத்தை தலைவர் பதவிக்கு நிறுத்தியது.
இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் ஏற்கவில்லை. மேலும் இரண்டு கட்சிகளும் சேர்ந்து தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த குமாரை நிறுத்தி வெற்றி பெற வைப்பது என முடிவு செய்தனர்.
இதனையடுத்து நேற்று அவர்கள் திமுக சார்பில் 9ஓட்டுகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 5 ஓட்டுகளும் வந்தது. இதில்யாரும் எதிர்பாராத நிலையில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் திமுகவுக்கு வாக்களிக்க அதன்மூலம் குமார் 15 ஓட்டுகளை பெற்று வெற்றிபெற்றனர். மாற்றிஓட்டு போட்ட அதிமுக வின்கருப்பு ஆடு யார் தெரியவில்லை.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதிமுக வினருக்கும் வாக்குவாதம் நடந்து வருகிறது. எதிர் அணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூன்று வாக்குகளும் அதிமுக சேர்ந்த 10வாக்குகளில் 9 வாக்குகள் என 12 வாக்குகள் பெற்று வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
இதில் ஒரு வாக்கு சீட்டில் பெயருக்கு நேராக சிவப்பு குறியீட்டில் டிக் மார்க் போடாமல் அதில் வேட்பாளர்கள் பெயருக்கு கீழே கோடு போட்டு இருந்தனர். யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதலால் அதனால் அந்த வாக்கு சுப்பிரமணியத்துக்கு சேர்ந்தது என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம்தான் சுப்பிரமணியம் 12 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் அவர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தது வாக்களித்தது அதிர்ச்சி அளித்தது.






