கிராமிய பாடகி லெட்சுமி அம்மாள் காலமானார்!
பருத்திவீரன் படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’ பாடல் பாடிய கிராமிய பாடகி லெட்சுமி அம்மாள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். பருத்தி வீரன் திரைப்படம் வந்தபோது தென் தமிழகத்தில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தப் படம் தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை சுற்றுவட்டார கிராம மக்களின் வாழ்வியலை மண் மணம் மாறாமல் காட்டியது.
இதற்குப் பெரும் பங்கு அந்தப் படத்தில் இடம் பெற்ற நாட்டுப்புறப் பாடல்களுக்கும் உண்டு. இன்றும் தென் மாவட்டத் திருவிழாக்களில் தவறாமல் இடம் பிடிக்கும் அந்தப் பாடல்களைப் பாடியவர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த லட்சுமி பாட்டி. பாடியதோடு மட்டும் இல்லாமல் அந்தப் பாடலில் நடித்ததன் காரணமாக அந்தச் சமயத்தில் பட்டி தொட்டியெங்கும் பருத்திவீரன் லெட்சுமி எனப் புகழ்பெற்றார்.





