பில்லூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை..!
பில்லூர் அணையில் இருந்து 2-வது நாளாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மற்றும் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் என பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளான தேக்கம்பட்டி பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.






