--- --:--:-- --

தந்தை, அக்காவை கழுத்து அறுத்து கொன்ற சினிமா டப்பிங் ஆர்ட்டிஸ்ட்..!

4

சென்னை அருகே தந்தை மற்றும் உடன்பிறந்த சகோதரியை கொலை செய்த மனநல பாதிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாங்காட்டை சேர்ந்த பிரகாஷ் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

 

சினிமா துறையில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்த பிரகாஷுக்கு சமீபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரகாஷின் தாய் சாந்தி மாத்திரை வாங்குவதற்காக வெளியே சென்று வந்த நிலையில் தனியாக இருந்த தந்தையை அவர் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

 

மேலும் அதே பகுதியில் வசித்து வரும் தனது அக்கா ப்ரியா வீட்டிற்கு சென்ற பிரகாஷ் கழுத்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். புகாரின் பேரில் பிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon