இடி தாக்கியதில் தந்தை-மகன் பலி..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலித் கோட்டை கிராமத்தில் இடி தாக்கியதில் தந்தை-மகன் பலியாகியுள்ளனர். இது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தனி கோட்டை காலனியை சேர்ந்த தந்தையும் மகனும் வயலில் தேங்கியிருக்கும் நீரை வடிய வைக்க நல்லிரவு சென்றனர். அப்போது இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.





