பேச மறுத்த காதலியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த இளைஞர்..!
காரைக்குடி அருகே தன்னுடன் பேச மறுத்த காதலியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய காதலனை போலீசார் தேடி வருகின்றனர். இளைஞரும் அழகப்பா கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவி மூன்று ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.
பெண் கேட்டு மாணவி வீட்டுக்கு சென்ற பொழுது மூத்த மகளுக்கு திருமணம் ஆன பிறகு இளைய மகளின் திருமணத்தை பற்றி பேச முடியும் என மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அப்போது இருதரப்புக்கும் ஏற்பட்ட தகராறில் மாணவியின் தாய் கண்ணனை கீழே தள்ளிவிட இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது.
அதன்பிறகு மாணவி பேசுவதை நிறுத்திக் கொண்டதால் ஆத்திரமடைந்த கண்ணன் இன்று காலை மாணவி மாத்தூர் ரேஷன் கடை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது வழிமறித்து கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.





