--- --:--:-- --

கல்லூரி விடுதியின் 4வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை..!

4

னியார் கல்லூரியில் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் கன்னியாகுமரியை சேர்ந்த பவிஷா என்ற மாணவி முதலாமாண்டு நர்சிங் படித்து வந்தார்.

 

இந்த நிலையில் கல்லூரி விடுதியில் கட்டிடத்தில் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து பவிஷா தற்கொலைக்கு முயன்றார் படுகாயம் அடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon