ஆபாச வீடியோ இருப்பதாக கூறி பணம் பறித்த போலி போலீஸ்..!
சென்னையில் இளைஞர் ஒருவரை அவரது செல்போனில் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக கூறி மிரட்டி பணம் பறித்து சென்ற போலி போலிசை போலீசார் கைது செய்தனர். சென்னையில் இளைஞர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது இளைஞரை வழிமறித்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை போலீசார் என கூறி அறிமுகம் ஆகியுள்ளார். இளைஞரின் செல்ஃபோனில் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறி அவர்கள் செல்போனை வாங்கிய நபர் செல்போனை சோதனை செய்வது போல் நாடகமாடி பணம் கொடுத்தால் விட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து ஏடிஎம்மில் 2000 ரூபாய் பணத்தை எடுத்து இளைஞர் கொடுத்த நிலையில் அவர் தப்பி சென்றிருக்கிறார். இது குறித்து இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அந்த பகுதியில் இருந்து சிசிடிவி மூலம் இளைஞரிடம் மோசடி செய்தது போலி போலிஸ் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.





