முப்படை தலைமை தளபதியின் பதவிக்காலம் நீட்டிப்பு
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக செயல்பட்டுவரும் அனில் சவுகானின் பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ராணுவத்தில் 1981-ம் ஆண்டு சேர்ந்த அவர், சிறப்பான பணியாற்றியதுடன், பல்வேறு பொறுப்புகளை நியமித்துள்ளார்.
பல பதக்கங்களை பெற்றுள்ளார். 2022 செப்.,30 முதல் முப்படை தலைமை தளபதியாக பணியாற்றி வருகிறார். 2026 மே 30 அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது.






