--- --:--:-- --

நவ.10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு..!

5

திகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள், மற்றும் சாலையோரம் லாரிகளில் பிரத்யேக வாகனங்களின் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

டெல்லியில் காற்றின் தரம் மிகமோசமான அளவை எட்டியுள்ளதால், ஆரம்பப் பள்ளிகளுக்கு வரும் 10ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான அளவை எட்டி வருகிறது. காற்றின் தரக்குறியீடு 400க்கும் அதிகமான புள்ளிகளை எட்டியுள்ளது.

 

இதையடுத்து டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் தொடக்கப்பள்ளிகளுக்கு வரும் 10 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள், மற்றும் சாலையோரம் லாரிகளில் பிரத்யேக வாகனங்களின் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Right Menu Icon