--- --:--:-- --

மீண்டும் உதயநிதி சர்ச்சை பேச்சு… கொந்தளித்துப்போன மாஜி பெண் அமைச்சரின் மகள்!

Udayanithi 01

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு, சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி ஸ்வராஜ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக வேட்பாளர் கயல்விழியை ஆதரித்து பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோர் நரேந்திர மோடியால் தான் உயிரிழந்தனர்’ என்று பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

உதயநிதியின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சுஷ்மாவின் மகள் ட்விட்டரில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி ஸ்வராஜ் தனது டிவிட்டர் பதிவில் கூறுகையில், எனது தயாரின் நினைவுகளை உங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் கூறியது அனைத்தும் பொய்!

 

பிரதமர் நரேந்திர மோடி, என் அம்மா மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். எங்கள் வாழ்வின் மிகவும் கடினமான கால கட்டங்களில் பிரதமரும் கட்சியும்தான் எங்களுக்கு உதவி புரிந்தனர். உங்களின் பேச்சு எங்களை வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon