--- --:--:-- --

ரூ.1 கோடி கல்விக்கட்டணம் செலுத்தி கல்லூரியில் சேர்ந்த EWS பிரிவு மாணவர்கள்

4

பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் என்ற சான்றிதழ் வைத்துள்ள முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் கட்டணம் செலுத்தி முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது.

 

மொத்தம் உள்ள 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில், அதில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தகுதி பெற்றனர். முதல் கட்ட கலந்தாய்வு மூலம் 27 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற, EWS எனப்படும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் 140 பேர் தனியார் கல்லூரிகளில் ஒரு கோடி ரூபாய் வரை கட்டணம் செலுத்தி மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

 

குறிப்பாக நீட் முதுநிலை தேர்வு தரவரிசையில் ஒரு லட்சத்து 10 ஆயிரமாவது இடத்திற்கும் கீழ் சென்ற மாணவர் ஒருவர் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ’என்ஆர்ஐ’ ஒதுக்கீட்டில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள மருத்துவ கல்லூரியில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலுத்தி படிக்கும் தோல் சார்ந்த மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்.

Right Menu Icon