தாஜ்மஹால் கூட கைவிட்டுப் போகும்: கபில் சிபில்
வக்ஃப் சட்டத்தால் தாஜ்மஹால் கூட கைவிட்டுப் போகும் என மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் வாதாடியுள்ளார். வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான கபில் சிபில், இந்தச் சட்டம் பின்னோக்கிச் சென்று வக்ஃப் தன்மையை இழக்கச் செய்கிறது என்றார். இதனால், தாஜ்மஹாலும் கைவிட்டுப் போகலாம் என தெரிவித்தார்.






