அரசியலுக்கு வந்தாலும் துளசிமதி முருகேசன் நிச்சயம் முதலிடத்தில் இருப்பார் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இளம் வெற்றியாளர் துளசிமதி முருகேசன், விளையாட்டுத்துறையில் மட்டுமல்ல அரசியல் துறைக்கு வந்தாலும், அவர் முதல் இடத்தில் இருப்பார்” எனப் பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் வாழ்ந்த அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டுள்ள அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் விதமாக ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ எனும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




