--- --:--:-- --

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சடலமாக மீட்பு..!

4

பிரபல சீரியல் நடிகை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி தொடர்களில் நடித்து வந்தவர் ராஜேஸ்வரி. இவர், சென்னை பிராட்வேயில் உள்ள வீட்டில் கணவருடன் வசித்து வந்துள்ளார்.

 

இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சைதாப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு ராஜேஸ்வரி சென்றுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர், தாயின் பிபி மாத்திரையை அதிகளவு உண்டதாகக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜேஸ்வரி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறகடிக்க ஆசை சீரியலில் அருணிற்கு அம்மாவாகவும், பாக்கியலட்சுமி சீரியலில் அவரின் தோழியாகவும் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon