பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7 முதல் தொடக்கம்..!
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 7, 2025) இணைய வழியில் தொடங்குகிறது. முதல் கட்டமாக, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பொதுப் பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஜூலை 19 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதிகளில் இணையதளம் வாயிலாகக் கலந்தாய்வில் பங்கேற்று, விரும்பிய பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்யலாம். இந்தக் கலந்தாய்வு குறித்த மேலும் விவரங்களை மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.






