கடற்கொள்ளையர்களிடம் சிக்கி பிழைத்த இன்ஜினியர்!
நைஜீரியா கடற் கொள்ளையர்களிடமிருந்து மீண்ட தமிழக கப்பல் பொறியாளர் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
ஸ்பெயினில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் கப்பல் பொறியாளராக பணியாற்றும் சென்னையை சேர்ந்த வருண்ராஜ் என்பவர் கடந்த 2ஆம் தேதி ரஷ்ய பொறியாளர்கள் இரண்டு பேருடன் நைஜீரியா கடலுக்கு சென்று உள்ளார். அப்போது வருண்ராஜ் மற்றும் குழுவினரை பன்னாட்டு கடற்கொள்ளையர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து உள்ளனர்.
அவர்களை மீட்க சென்ற நைஜீரியா கடற்படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து ஐந்து நாட்களாக உணவு குடிநீர் இன்றி கடற்கொள்ளையர்கள் பிடியில் இருந்து வரும் வருண்ராஜ் நீண்ட போராட்டத்திற்குப் பின்பு அந்நாட்டு அதிகாரிகள் மீட்டு தாயகம் அனுப்பி வைத்தனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வரும் வருண்ராஜ் தன்னை மீட்க உதவிய மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்.





