மின் ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!
புதுச்சேரியில் மின் ஊழியர்கள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக மின்துறை ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் மின் துறை ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் மின்துறை அமைச்சர் நமசிவாயம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது கருத்துகளைக் கேட்ட பின்னரே தனியார்மயமாக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.






