தேர்தல் சுற்றுப்பயணம்: நீதிமன்றத்தை நாட விஜய் முடிவு
த.வெ.க தரப்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். ஆனால், அந்த இடம் பேருந்து நிலையம் என்பதால், அனுமதி கொடுத்தால் நாள் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது.
மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு மீண்டும் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் காவல்துறை மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, 2 முறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாற்று இடம் குறித்து த.வெ.க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
3-வது முறையும் காவல்துறை அனுமதி மறுத்தால், நீதிமன்றத்தை அணுக த.வெ.க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






