--- --:--:-- --

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் திட்டம்..!

3

மிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர்களின் கேரள பயணம் இன்று முடிவடைகிறது. அதன்படி வரும் 8 ஆம் தேதி இரவு கொல்கத்தா செல்லும் தேர்தல் ஆணையர்கள் 9 ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். பின்னர் 10 ஆம் தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

 

அதன்பிறகு டெல்லியில் 11 ஆம் தேதி சமூக ஊடக நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. பின்னர் தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட்டு மார்ச் 15 அல்லது 16ல் தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஐந்து மாநில தேர்தலுடன் சில மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் ஐந்து முதல் ஏழு கட்டமாக தேர்தல் நடத்த ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற நான்கு மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon