--- --:--:-- --

இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை..!

8

5 மாநில சட்டமன்ற தேர்தலில் விதிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுக்கூட்டங்கள் பேரணிக்கான தடை இன்றுடன் நிறைவடையும் நிலையில் அது தொடர்பாக மத்திய, மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் உடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.

 

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. கொரொனா காரணமாக தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

 

அதன்படி தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 300 நபர்களுடன் குறைந்த வழிகாட்டு நெறிமுறைகள் உடன் கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்றுடன் நிறைவடைகிறது.

 

கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய மாநில சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை நடத்துகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon