டீசல் லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு..!
திருவண்ணாமலை அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, அதே லாரி மோதியதில் மூதாட்டி கனகாம்பரம் (70) சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசல் ஆறாக ஓடியதால், கிராம மக்கள் கேன், குடம் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிச் சென்றனர்.






