--- --:--:-- --

துரைமுருகனுக்கு உடல் நலக்குறைவு- அப்போலோவில் அனுமதி

duraimurugan

திமுக பொருளாளர் துரைமுருகன், சென்னை அப்போலோவில் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.

 

திமுக பொருளாளராக பொறுப்பு வகித்துவருபவர் துரைமுருகன் (81). உடல் சோர்வு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டு அவரின் உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon