துரை வைகோ ராஜினாமா முடிவு வாபஸ்..!
மதிமுக முதன்மை செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை துரை வைகோ வாபஸ் பெற்றார். மல்லை சத்யா – துரை வைகோ இடையே சமாதானம் ஏற்பட்டதால் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் பழைய மனக்கசப்புகளை மறந்து கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்ட வைகோ அறிவுறுத்தியுள்ளார்.





