--- --:--:-- --

தேனியில் களமிறங்கும் டிடிவி தினகரன்..!

3

மமுகவின் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சிக்கு திருச்சி, தேனி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.இதைதொடர்ந்து தேனி மற்றும் திருச்சி மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பெயர்களை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

 

அதன்படி, தேனி தொகுதியில் தானும், திருச்சி தொகுதியில் செந்தில் நாதனும் போட்டியிடுவதாக தினகரன் அறிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தேனியில் பணியாற்ற காலம் ஒரு வாய்ப்பை தந்துள்ளதாகவும், மீண்டும் தனக்கு மக்கள் வாய்ப்பு தருவார்கள் என்றும் தெரிவித்தார்.

 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய டிடிவி தினகரன், “மூன்றாவது முறையாக மோடி மீண்டும் பிரதமராக வர உள்ளார். அனைத்து நாடுகளும் பணவீக்கத்தில் சிக்கியுள்ள நிலைய, மோடியின் ஆட்சியால் இந்தியா சிறப்பாக இருக்கிறது. வரும் காலங்களிலும் பாஜகவுடன் அமமுக கூட்டணி தொடரும்” என்று பேசினார்.

 

தேனி தொகுதியில் தி.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் அ.தி.மு.க சார்பில் நாராயணசாமியும் போட்டியிடும் நிலையில், பாஜக கூட்டணி சார்பில் அவர்களை எதிர்த்து டிடிவி தினகரன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

 

திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை எதிர்த்து அமமுக சார்பில் செந்தில் நாதன் போட்டியிடுகிறார். இதையடுத்து டிடிவி தினகரன் இன்றே தேனியில் தனது பரப்புரையை தொடங்கவிருக்கிறார். தேனி மக்களவை தொகுதியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் களம் காணுகிறார்.

 

1999 ஆம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி, மறுவரையறைக்கு பிறகு தேனி நாடாளுமன்றத் தொகுதியாக மாற்றப்பட்டது. அதன்பின் 2004 தேர்தலில் தேனி தொகுதியில் தோல்வியை தழுவிய நிலையில்,டிடிவி தினகரன் மீண்டும் களம் காண்கிறார்.

Right Menu Icon