வாக்குச்சாவடி மையத்தில் குடிபோதையில் உளறிய போலீசை விரட்டிய மக்கள்..!
திருப்பத்தூர் அருகே வாக்குச்சாவடி மையத்தில் குடிபோதையில் புரண்ட காவலரை அடித்து வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொரட்டி வாக்குச்சாவடி மையத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் வாக்களித்தனர்.
அமைதியான முறையில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பழனி என்ற காவலர் உள்ளூர் அரசியல் கட்சியினருடன் சேர்ந்து கொடுத்துவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் விழுந்து கிடந்துள்ளார்.
அதைப் பார்த்த மக்கள் அந்த காவலரை தட்டிக் கேட்டனர். போதையில் இருந்த காவலர் தகராறில் ஈடுபட்டதால் மேலும் ஆத்திரமடைந்த மக்கள் காவலரை அடித்து விரட்ட தொடங்கியுள்ளனர் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் அங்குள்ள அரசியல் கட்சியினர் காவலர்களுக்கு மது வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
இதனை குடித்த காவலர்கள் வாக்குச்சாவடி மையத்தில் கண்டபடி திட்டியதால் பொதுமக்கள் அடித்து விரட்டிய கதை அரங்கேறியுள்ளது.






