--- --:--:-- --

கொடைக்கானலில் போதைக் காளான் விற்பனை..!

3

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதை காளான் விற்பனை மீண்டும் அதிகரித்து வருவதால் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கையாகவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் காணப்படுகின்றன.

 

பொதுவாக கண்களுக்கு நல்லது என கூறப்பட்டாலும் அவற்றில் நச்சு காளான்களும் அடங்கும். அவற்றில் கொடைக்கானல் மேல் மலைப்பகுதியில் காணப்படும் காளானில் வேதிபொருள் அதிகம் உள்ளதால் அது போதை தரும் காளானாக விற்பனை செய்கிறார்கள்.

 

சரியான பக்குவம் இல்லாமல் அந்த காளானை உட்கொண்டால் உயிர் போய்விடும் என்ற நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை காரணமாக அடங்கியிருந்தது. இந்நிலையில் இளைஞர்களை குறிவைத்து தற்பொழுது போதை காளான் விற்பனை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 

குறிப்பாக கேரளாவை சேர்ந்த இளைஞர்கள், கொடைக்கானல் மேல்மலை பகுதியை நோக்கி அதிகம் செல்வதாக கூறப்படுகிறது. எப்படி வர வேண்டும், யாரை பார்க்க வேண்டும் என்பதெல்லாம் வாட்ஸ்அப் வழியாக பரிமாற்றம் செய்யப்படுவதால் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி விடுவதாக அங்குள்ள உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சூழலைப் பயன்படுத்தி காளான்களை விற்பனை செய்கிறார்கள் என கூறப்படுகிறது.

Right Menu Icon