போதைப்பொருள் வழக்கு – நடிகர் ராணாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போதைபொருள் வழக்கு தொடர்பாக ஆஜரான பாகுபலி நடிகர் ராணாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட இயக்குனர் பூரி ஜெகநாத், நடிகைகள் சார்மி, ராகுல் ப்ரீத் சிங், நடிகர்கள் ராணா உள்ளிட்ட 12 பேர் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். இதில் பண மோசடி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பூரி ஜெகன்நாத் நடிகைகள் சார்லி, ரகுல் பிரீட் சிங் ஆகியோரிடம் அமலாக்கத் துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் விசாரணைக்காக நடிகர் ராணா ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராகியுள்ளார்.






