--- --:--:-- --

சேலம், நாமக்கல்லில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை..!

7

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மற்றும் நாமக்கலில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்க உள்ளார்.

 

இதற்காக விமான மூலம் சேலம் மாவட்டம் கமலாபுரம் விமான நிலையம் வந்து அங்கிருந்து நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

 

இதனையொட்டி சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

 

Right Menu Icon