இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை..!
மதுரை கே புதூரில் வரதட்சனை கொடுமை புகாரில் மின்சார வாரிய உதவி இயக்குனர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தங்கநகை உட்பட ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் சீர்வரிசை வழங்கிய நிலையில் கூடுதலாக வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.






