--- --:--:-- --

2020 புத்தாண்டில் முதல் குழந்தை பிறந்தது எங்கே தெரியுமா..? இந்தியாவில் தான் பிறப்பு விகிதம் அதிகம்!!

11

2020 புத்தாண்டு தினத்தில், உலகிலேயே முதல் குழந்தை பிறந்தது பிஜி தீவுகளில் என்றும், இந்த நாளில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள் பிறப்பு இருக்கும் என்றும், இதில் அதிகபட்சமாக இந்தியாவில் மட்டும் 17% குழந்தைகள் என்றும் ஐநாவின் யுனிசெப் அமைப்பு அமைப்பு புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும் நாளில், அன்று இந்த பூமியில் புதிதாய் பிறக்கும் குழந்தைகளுக்கான சிறப்பு தினமாக ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் கொண்டாடுவதுடன், குழந்தைகள் பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளிவிபரங்களையும் வெளியிடுவது வழக்கம். அதன்படி இந்த புத்தாண்டின் முதல் தினத்தில் உலகம் முழுவதும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 என்று யுனிசெப் கணக்கிட்டுள்ளது.

 

இதில் உலகிலேயே, நாளொன்றுக்கு அதிக குழந்தைகள் பிறக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. இன்று ஒரு நாளில் மட்டும், இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 67,385 என்றும், இது உலகில் பிறக்கும் குழந்தைகளில் 17 சதவீதம் என்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இந்த எண்ணிக்கை 46,299 ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

அது போல், இன்று ஒரே நாளில் உலகம் முழுதும் பிறக்கும் குழந்தைகளில் 50% குழந்தைகள், இந்தியா (67,385), சீனா (46,299), நைஜீரியா (26039), பாகிஸ்தான் (16, 787), இந்தோனேசியா (13020), அமெரிக்கா ( 10, 452), காங்கோ ( 10,247), எத்தியோப்பியா (8493) ஆகிய 8 நாடுகளில் மட்டும் பிறக்கின்றனர் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.

 

இதில், இந்த ஆண்டின் முதல் குழந்தை பிஜி தீவுகளில் பிறந்துள்ளதாகவும், கடைசி குழந்தை பிறப்பு அமெரிக்காவில் இருக்கும் என்றும் யுனிசெப் தெரிவித்துள்ளதுடன், பிறந்து ஒரு மாதத்தில் இறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 2018 ஐ காட்டிலும் 47% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon