திமுக செயலாளர்கள் கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது..!
சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக திமுக செயலாளர்கள் கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெற இருப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, மாநகர செயலாளர்கள், ஒன்றிய நகர பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.






