பேனர் கட்டும் பொழுது மின்சாரம் தாக்கி திமுக பிரமுகர் பலி..!
கட்சி நிகழ்ச்சிக்காக பேனர் கட்டும் பொழுது இருவர் மீது மின்சாரம் பாய்ந்தது. வேலூர் மாவட்டம் வடுகன்தாங்கல் பகுதியில் பேனர் கட்டும் பொழுது மின்சாரம் தாக்கி திமுக பிரமுகர் உயிரிழந்துள்ளார்.
கட்சி நிகழ்ச்சிக்காக பேனர் கட்டும் பொழுது இருவர் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் மார்க்கபந்து உயிரிழந்துள்ளர். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





