--- --:--:-- --

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? – உச்ச நீதிமன்றத்தில் திமுகவின் புதிய மனுவால் சிக்கலோ சிக்கல்!!

dmk

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? – உச்ச நீதிமன்றத்தில் திமுகவின் புதிய மனுவால் சிக்கலோ சிக்கல்!!

 

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் நடந்தே தீரும் என்றும், திமுகதான் தேர்தலை நடத்த முட்டுக்கட்டை போட முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

 

இதற்கேற்ப திமுகவும், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த அவசரச் சட்டம் கொண்டு வந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வார்டு வரையறை குறித்தும் கேள்வி எழுப்பியதுடன், உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்து முழுமையான அறிவிப்பு வெளியிடாதது குறித்தும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தது. இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

 

இந்நிலையில், திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழகத்தில் தொகுதி வரையறை பணிகளை மாநில தேர்தல் ஆணையம் நிறைவு செய்யாமல் உள்ளது. மேலும் இட ஒதுக்கீடு, சுழற்சி முறையில் தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் அறிவிக்கப்படவில்லை. எனவே இந்தப் பணிகளை நிறைவு செய்யாமல் உள்ளாட்சி தேர்தல் பட்டியலை வெளியிடவும், தேர்தலை நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

 

ஏற்கனவே திமுக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வராத நிலையில், தற்போது புதிய மனுவையும் தாக்கல் செய்துள்ளதால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? என்று கேள்வி எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon