அந்த வார்த்தைக்கே மரியாதை இல்லாம பண்ணீட்டாங்க: EPS
தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய்விட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுதலையான நிலையில், அவரது தியாகம் போற்றத்தக்கது என CM ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதனை விமர்சித்த இபிஎஸ், SBஐ கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தவர்களே தற்போது அவரது விடுதலையை வரவேற்பதாக சாடினார். மேலும், தமிழகத்தில் கொலை சம்பவம் அரங்கேறாத நாளே இல்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.






