எந்த துணி எடுத்தாலும் ரூ.6 தான்.. மன்னார்குடியில் முண்டியடித்த மக்கள்..!
மன்னார்குடியில் 6 ரூபாய்க்கு துணிகள் விற்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் துணிக்கடை ஆறாம் ஆண்டில் தொடக்க விழாவை ஒட்டி சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது அதாவது ஆறு ரூபாய் முதல் 60 வரை துணைகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்த அந்த பகுதியினர் துணிக்கடைக்கு வந்து போட்டி போட்டுக் கொண்டு துணிகளை வாங்கி சென்றனர். ஒரு மணி நேரம் மட்டும் இந்த சலுகை இருந்ததால் பின்னர் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.






