--- --:--:-- --

instagram ஃபேக் ஐடியால் வந்த தகராறு..!

9

பேக் ஐடி மூலம் இன்ஸ்டால் மெசேஜ் அனுப்பியதால் ஏற்பட்ட தகராறில் இளைஞர்களுக்குள் கைகலப்பாகி கத்தி குத்துடன் முடிந்த சம்பவம் திருப்பூரில் அரங்கேறியுள்ளது. திருப்பூர் வாஷிங்டன் பகுதியை சேர்ந்தவர்கள் கோபி மற்றும் சிவா இருவரும் அவினாசி எடுத்த பழங்கரை அருகே புத்தாண்டை முன்னிட்டு நண்பர்களுடன் மது அருந்தியுள்ளனர்.

 

அப்பொழுது கோபி நண்பர் ஆன வசந்தகுமார், ஃபேக் ஐடி மூலம் 18 வயது சிறுவன் ஒருவன் தனக்கு தொல்லை கொடுப்பதாக புலம்பி உள்ளார். இதனால் சில நாட்கள் முன்பு அவரை வீடு தேடி சென்று தாக்கியதாகவும் வசந்தகுமார் கூறிய நிலையில் விவரங்கள் மது அருந்தி கொண்டிருந்த அதே இடத்திற்கு 15 வயது சிறுவனும் தன் நண்பர்களுடன் மது அருந்து வந்திருக்கிறார்.

 

அங்கு தன் நண்பர்களுடன் சேர்ந்து வசந்தகுமாரிடம் அவரது நண்பர்களிடமும் சிறுவன் தகராறு செய்ய இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக் கொண்டனர். கோபி மற்றும் சிவா கத்தியால் குத்துப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 18 வயது சிறுவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon