புதிய வகையிலான கொரொனா வைரஸ் வௌவால்களிடம் இருந்து கண்டுபிடிப்பு..!
சீனாவில் புதிய வகையிலான கொரொனா வைரஸ்களை வௌவால்களிடம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே உலகம் முழுவதும் பரவி பல லட்சம் பேரைப் பலி கொண்டுள்ள கொரொனா பெருந் தொற்றுக்கு உலக நாடுகள் போராடி வருகின்றன.
சீனாவின் ஆய்வுக் கூடத்திலிருந்து கொரொனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா ,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் புதிய வகை வைரஸ் வௌவால்களிடம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். வௌவால்களில் எத்தனை வகைகள் உள்ளன என்றும் அதில் எத்தனை மனிதர்களிடம் பரவி நோய்களை ஏற்படுத்தக்கூடியவை என்றும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.







