இயக்குனர் ஏ.எல். விஜய்யின் தாய் மரணம்..!
அஜித் நடிப்பில் வெளிவந்த கிரீடம் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். இவர் இயக்கத்தில் மதராசபட்டினம், தலைவா, தெய்வத்திருமகள், தலைவி என பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.இயக்குனர் ஏ.எல். விஜய் பிரபல முன்னணி தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகன் ஆவர்.
இந்நிலையில், ஏ.எல். அழகப்பனின் மனைவியும், ஏ.எல். விஜய்யின் தாயாருமான வள்ளியம்மை இன்று காலை இயற்கை மரணமடைந்துள்ளார். வள்ளியம்மையின் மரணத்திற்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.





