--- --:--:-- --

கர்நாடக வனத்துறையினர் சுட்டதில் உயிரிழந்தாரா? காணாமல் போன நிலையில் கிடைத்த சடலம்..!

2

ர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் காணாமல் போன தமிழக மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி இருந்த நிலையில் ஒரு மீனவர் காணாமல் போயிருந்தார்.

 

தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் காணாமல் போன மீனவர் ராஜாவின் உடல் தமிழக கர்நாடக எல்லையை ஒட்டிய பகுதியில் மீட்கப்பட்டது. கர்நாடகா வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராஜா உயிரிழந்தார். தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது.

 

இந்த சம்பவம் காரணமாக இரு மாநில எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவு வருகிறது. இதனால் எல்லைகளில் இரு மாநில காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க பாலாறு வழியாக தமிழக கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon