--- --:--:-- --

மாறுவேடத்தில் சென்று மனைவியின் கழுத்தை அறுக்க முயன்ற கணவன்..!

1

சென்னை அருகே காதல் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மாறுவேடத்தில் சென்று மனைவியின் கழுத்தை அறுக்க முயன்ற அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த குமாரசாமிக்கு திருமணமாகி ஒரு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

 

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மனைவியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிளேடால் முகத்தை அறுத்து விட்டு தப்பிச் சென்றார்.

 

வழக்கு பதிந்த போலீசார் சம்பவ இடத்ததில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது மாறுவேடத்தில் வந்து ஜெயராணியை கொலை செய்ய முயன்ற நபர் அவரது கணவர் குமாரசாமி என்று தெரியவந்தது.

 

Right Menu Icon