கருப்புக்கொடி ஏந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாளை ஆர்ப்பாட்டம்..!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு அளித்துள்ளது.
சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட ஆளுநர் மறுத்து வருகிறார் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஆளுநருக்கு எதிராக நாளை கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





