டெல்லி கார் வெடிப்பு – உயிரிழந்தவர்களுக்கு மிர்வாய்ஸ் உமர் பாரூக் இரங்கல்
டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஹுரியத் மாநாட்டுத் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பாரூக் இரங்கல் தெரிவித்துள்ளார். “டெல்லியில் நடந்த துயரமான கார் வெடிப்பு மிகவும் வருத்தமளிக்கிறது.
இது விலைமதிப்பற்ற உயிர்களைப் பலிகொண்டது மற்றும் பலரைக் காயப்படுத்தியது. துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் செய்கிறேன். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக” என்று அவர் கூறினார்.






