--- --:--:-- --

தீபாவளி ரயில் டிக்கெட் – முன்பதிவு நாளை தொடக்கம்

10

தீபாவளிக்கு ரயில்கள் மூலம் சொந்த ஊர் செல்வோர் நாளை முதல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

 

அன்றைய கிழமை திங்கள் கிழமை என்பதால் வெளியில் செல்வோர் குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமையன்று மூட்டை முடிச்சுகளை கட்டிவிடுவார். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் நாள் ரயிலில் பயணிக்க விரும்புவோர் முன்பதிவு செய்யலாம் எனவும் அக்டோபர் 22ஆம் நாள் பயணம் செய்ய விரும்புவோர் நாளை மறுநாளும், அக்டோபர் 23 இல் பயணிக்க விரும்புவோர் இந்த மாதம் 25ஆம் நாள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்பதிவு செய்ய விரும்புவோர் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது .

 

Right Menu Icon