கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு..!
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, நாக்கு அறுத்து துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதையடுத்து பெண்ணின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள் காவல் துறையினரின் சமாதான பேச்சை அடுத்து உடலை பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.
இரவோடு இரவாக இறுதி சடங்குகள் நடத்தும்படி குடும்பத்தினரிடம் போலீசார் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை உடலை எரிக்க மாட்டோம் என்று அந்தப் பெண்ணின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




