--- --:--:-- --

சேலம் மேட்டூர் அணையில் இறந்து மிதக்கும் மீன்கள்..!

9

சேலம் மேட்டூர் அணையின் 16 கண் மதகு பகுதியில் மர்மமான முறையில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள். மீன்கள் இறப்பிற்கு மர்ம நபர்கள் பெரிய அளவிலான கட்லா, மிர்கால் உள்ளிட்ட மீன்களை பிடிக்க ரசாயன திரவங்களை ஊற்றியதே காரணம் என கரையோர மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

 

அதேநேரம், இதுகுறித்து ஆய்வு செய்ய தண்ணீர் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Right Menu Icon